Pages

Wednesday, May 20, 2015

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : 41 பேர் முதலிடம்... 192 பேர் இரண்டாம் இடம்... 540 பேர் மூன்றாம் இடம்


சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன் எப்போதும் இல்லாத அளவில் 41 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். 41 மாணவர்களும் 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 540 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர். 

தேர்ச்சி சதவீதம்:

வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.5 சதவீதமும், மாணவர்களில் 90.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்

500க்கு 500:
பிறமொழியில் படித்த 5 மாணவர்கள் 500க்கு 500 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். 

தமிழ் பாடத்தில் 100க்கு 100:

தமிழ் பாடத்தில் 586 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர். 

ஆங்கிலப் பாடத்தில் 100க்கு 100:

ஆங்கிலப் பாடத்தில் 644 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

கணிதத்தில் 100க்கு 100:

கணிதப் பாடத்தில் 27,134 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

அறிவியல் பாடத்தில் 100க்கு 100:

அறிவியல் பாடத்தில் 1,13,853 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

சமூகஅறிவியல் பாடத்தில் 100க்கு 100:

51,629 மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனை:

அரசுப் பள்ளியில் படித்த 19 மாணவர்கள் முதல் 3 இடங்களையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வாழப்பாடி ஜெயநந்தனா, பட்டுக்கோட்டை வைஷ்ணவி, பெரம்பலூர் பாரதிராஜா ஆகிய 3 அரசுப் பள்ளி மாணவர்களும் 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.  

கடலூரில் 4 பேர் முதலிடம்:

முதலிடம் பிடித்த மாணவர்களில் 4 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். 2 மாணவர்கள் மாநிலத்தில் 2ம் இடமும், 6 பேர் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.

தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடம்:

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 98.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்ற-து. விருதுநகர் 97,98 சதவீதம் பெற்று இரண்டாமிடத்திலும், திருச்சி 97.62 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாமிடத்திலும் உள்ளன. சென்னை மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் 94.04 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்திலேயே குறைந்த அளவாக 83.78 சதவீதம் தேர்ச்சி பெற்று திருவாரூர் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment